கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்

தென் கொரியா: தென் கொரியாவில் கொரோனா வைரஸால்  மேலும் 169 பேருக்கு  பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியாவே உள்ளது. இந்நிலையில் புதிய ஆய்வின்படி, அங்கு ஒட்டு மொத்தமாக அமெரிக்க ராணுவ வீரர் உள்பட1146 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் தென் கொரியாவில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தென்கொரியாவின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இடையேதான் அதிகம் பரவியுள்ளது. எதையும் வெளிப்படுத்தாமல் பிரச்சனைகளை தங்கள் சமூகத்திற்குள்ளேயே ரகசியமாக காக்கும் தன்மை கொண்ட பிரிவினராக இவர்கள் கருதப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

கிறிஸ்துவ மதத்தினருக்கு சொந்தமான கிறிஸ்துவ மதத்தினருக்கு சொந்தமான ஷிஞ்சியோன்ஜி தேவாலயத்தில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 169 பேரில் 134 பேர் தேகு எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அங்குள்ள எனும் தேவாலயத்தில் இருந்தே அதிகமானோருக்கு கொரோனா பரவியதாகவும் கூறப்படும் நிலையில், தேவாலயத்துடன் தொடர்புடைய சுமார் 2 லட்சம் பேரை பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: