இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தி வந்த 1.25 கிலோ தங்கம் பறிமுதல் : பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை: விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தி வந்த 54.6 லட்சம் மதிப்புடைய 1.25 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையை சேர்ந்த பாத்திமாபாசியா (39), ராமநாதபுரத்தை சேர்ந்த சமான்பாரிக் (24) ஆகிய இருவரும் சுற்றுலா பயணியாக சென்னைக்கு வந்திருந்தனர். இருவரின் உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, பாத்திமாபாசியாவின் உள்ளாடையில் 485 கிராம் தங்க கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 21.5 லட்சம். மேலும் சல்மான் பாரிக்கின் உடலில் 430 கிராம் தங்க கட்டிகள் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு 18.18 லட்சம். இந்நிலையில் நேற்று காலை 10.50 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் நடத்திய சோதனையில் ராமநாதபுரத்தை சேர்ந்த மைதீன் அப்துல் ரஹ்மான் (21)  என்பவர் சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு வந்திருந்தார். அவரை சோதனை செய்தபோது உள்ளாடையில் 334 கிராம் தங்க கட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு 15 லட்சம். இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனர். விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ₹54.6 லட்சம் மதிப்புடைய 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: