அடையாறு ஆற்றில் மண் அள்ளிய 3 லாரிகள் பறிமுதல்

சென்னை : சென்னை அடையாறு ஆற்றை தூர்வாரும் பணி தமிழக பொதுப்பணி துறை சார்பில் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த பணியின் போது அடையாறு ஆற்றில் அள்ளப்படும் மண்ணை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக தொடர் புகார்கள் வந்தன. அதன்பேரில், அபிராமபுரம் போலீசார் சட்ட விரோதமாக மண் அள்ளும் நபர்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அடையாறு ஆற்றில் இருந்து மண் அள்ளிக்கொண்டு கிரீன்வேஸ் சாலை வழியாக சென்ற 3 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது மண் அள்ளுவதற்கான எந்த ஆவணங்களும் இல்லாததால் 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு விசாரணை நடத்திய போது பொதுப்பணித்துறைக்கு செந்தமான வாகனம் என தெரியவந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: