×

இந்தியா, மியான்மர் குடியுரிமை சட்டம் மத சுதந்திர ஆணையம் மார்ச் 4ல் விசாரணை

வாஷிங்டன்: இந்தியாவில் சமீபத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத சிறுபான்மை மதத்தினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்கிறது.

இந்த புதிய சட்டம் அண்டை நாடுகளில் மதத்தின் பெயரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியா வந்துள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சர்வதேச மத சுதந்திர ஆணையம் (யுஎஸ்சிஐஆர்எப்) இந்தியா, மியான்மரில் அமலில் உள்ள குடியுரிமை சட்டம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை வரும் மார்ச் 4ல் தொடங்குகிறது என்று அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : India ,Myanmar Citizenship Law Religious Freedom Commission Inquiry March 4 , India, Myanmar Citizenship Law, Religious Freedom Commission, Inquiry March 4
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...