தென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா

சியோல்: தென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய ‘கோவிட் 19’ என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாட்டை புரட்டி போட்டது. 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கொரோனா கால்பதிக்க தொடங்கி உள்ளது. இதில் தென்கொரியாவில் வேகமாக பரவி வருகின்றது. இங்கு இதுவரை 8 பேர் கொனோராவிற்கு பலியாகி உள்ளனர். மேலும் நேற்று புதிதாக 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 893 ஆக உயர்ந்துள்ளது.

நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக நோய் பாதித்த 60 பேரில் 49 பேர் ேடகு பகுதியைச் சேர்ந்தவர்கள். வைரஸ் பரவலையடுத்து முககவச தயாரிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.  தென்கொரியாவின் நாடாளுமன்ற கூட்டமும் நேற்று ரத்தானது. கடந்த வார கூட்டத்தில் கொரோனா பாதித்த ஒருவர் பங்கேற்றதாக வந்த தகவலை அடுத்து நாடாளுமன்றம் மூடப்பட்டு தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 80,000 பேர் பாதிப்பு

பல்வேறு நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக சர்வதேச அளவில் 80 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, சீனாவில் 2,663 பேர் உயிரிழந்துள்ளனர், 77,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹாங்காங்; 2 உயிரிழப்பு, 81 பேர் பாதிப்பு, மாகாவ் 10 பேர் பாதிப்பு, ஜப்பான் 4 உயிரிழப்பு, பிரின்சஸ் கப்பலில் உள்ள 691 பேர் உட்பட 850 பேர் பாதிப்பு, தென்கொரியா 8 பேர் உயிரிழப்பு, 893 பேர் பாதிப்பு, இத்தாலி 7 பேர் உயிரிழப்பு, 229 பேர் பாதிப்பு, சிங்கப்பூர் 89 பேர் பாதிப்பு, ஈரான் 12 பேர் உயிரிழப்பு, 61 பேர் பாதிப்பு, அமெரிக்கா 35 பேர் பாதிப்பு, சீனாவில் இருந்த ஒரு அமெரிக்கர் உயிரிழப்பு, தாய்லாந்து 37 பேர் பாதிப்பு, தைவான் ஒருவர் உயிரிழப்பு, 30 பேர் பாதிப்பு, ஆஸ்திரேலியாவில் 23, மலேசியாவில் 22, வியட்நாமில் 16 மற்றும் ஜெர்மனியினல் 16பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரான்ஸ்; ஒருவர் உயிரிழப்பு, 12 பேர் பாதிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 13 பேர் பாதிப்பு, இங்கிலாந்தில் 13, கனடாவில் 11, குவைத்தில் 3, இந்தியாவில் 3, ரஷ்யாவில் 2, ஸ்பெயின் 3, இஸ்ரேலில் 2, ஓமனில் 2, பக்ரைனில் 2, லெபனான் 1, பெல்ஜியம் 1, நேபாளம் 1, இலங்கை 1, ஸ்வீடன் 1. கம்போடியா 1, பின்லாந்து 1, எகிப்து 1, ஆப்கானிஸ்தான் ஒருவர் இறந்துள்ளார். பிலிப்பைன்சில் ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

18,000 கோடி நிதி கேட்கிறது அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சீனாவில் உயிர்ப்பலி அதிகரித்து வருகின்றது. வெளிநாடுகளிலும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி மனித உயிர்களை காவு வாங்கி வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக 2.5 பில்லியன் டாலர்களை (ரூ.17,997 கோடி) செலவழிக்க  அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அவசர நிதியாக 1.25 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யும்படி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கோரியுள்ளது. இந்த நிதியின் மூலமாக கொனோராவுக்கு மருந்து கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Related Stories: