குமரி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் ஒருவர் அனுமதி: கவச உடையுடன் டாக்டர்கள் பரிசோதனை

நாகர்கோவில்: ஹாங்காங்கில் இருந்து குமரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தவர், வயிற்று வலி காரணமாக, கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ், பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அந்த நாட்டில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்யப்படுகின்றனர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டு, முன் கவனிப்பு சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்ைத சேர்ந்த சுமார் 70 வயது நிரம்பியவர், சமீபத்தில் சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவரது உறவினர்களை சந்திப்பதற்காக கடந்த இரு நாட்களுக்கு முன் அவர் குமரி மாவட்டம் வந்தார்.  

Advertising
Advertising

திடீரென அவருக்கு வயிற்று வலி இருந்ததால், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது ஹாங்காங்கில் இருந்து வந்தவர் என கூறியதால், உடனடியாக டாக்டர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு லேசான வயிற்று வலி தவிர, சளி, இருமல், காய்ச்சல் வேறு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் பாதுகாப்பு கவச உடை அணிந்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். தேவைப்பட்டால் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories: