உச்ச நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 6 நீதிபதிகள் ஒரே நேரத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை சுற்றியுள்ள நாடுகள் கொரோனா வைரஸ் பரவி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், உச்ச  நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதைத்தொடர்ந்து நீதிபதி சந்திராசூட் நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேயிடம் ஒரு அவசர கோரிக்கை வைத்துள்ளார். அதில், “உச்ச நீதிமன்றத்தின் 6 நீதிபதிகளுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உடல்நிலையை பரிசோதித்தபோது, அவர்கள், 6 பேருக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனால் நீதிமன்ற ஊழியர்களுக்கு உரிய மருத்துவப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நீதிபதிகளில் 3 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பிவிட்டனர் என்றும் 2 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Related Stories: