திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து மலேசியா புறப்பட தயாரான விமானத்தில் திடீர் கோளாறு

திருச்சி: திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு தினமும் இரவு 12.30 மணிக்கு ஏர்ஏசியா விமானம்  புறப்பட்டு செல்லும். நேற்றுமுன்தினம்  ஏர்ஏசியா விமானம் கோலாலம்பூரில் இருந்து பயணிகளுடன் இரவு  11.40 மணிக்கு திருச்சி வந்தது.  மீண்டும் மலேசியா செல்வதற்காக 127 பயணிகள் அனைத்து சோதனைகளும் முடித்து தயாராக இருந்தனர். அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர்.

Advertising
Advertising

இதைத்தொடர்ந்து வபைலட், விமானத்தை இயக்குவதற்கான ஆரம்ப பணிகளை செய்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததை கண்டு பிடித்ததால் விமானத்தை இயக்க முடியாது என விமான நிலைய கட்டுப்பாட்டு  அறைக்கு தகவல்

அளித்தார்.  உடனே 127 பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு தனியார் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு கோளாறு சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: