×

லஞ்சம் வாங்கிய வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு நான்கு ஆண்டு சிறை: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை, சுங்கத்துறையில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் பிரதீப் குமார். இவர், துறைமுகத்திற்கு வரும் கண்டெய்னர்களில் உள்ள பொருட்களை பார்த்து அனுமதி வழங்கும் பணியில் இருந்து வந்துள்ளார்.  இந்தநிலையில் கடந்த 2014ம் ஆண்டு கண்டெய்னர் ஒன்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ₹5 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் சிபிஐ அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிரதீப் லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது சிபிஐ அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை, 14வது சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தி முன்பு நடந்து வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கில் பிரதீப்குமார் மீதான குற்றச்சாட்டு, சாட்சிகள் மற்றும் ஆவணங்களை  வைத்து நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ₹35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. என்று கூறி தீர்ப்பளித்தார்.



Tags : Customs officer ,CBI ,jail ,Bribery Customs , bribery, Customs ,officer , four years , jail
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...