×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு: 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், விழுப்புரத்தை சேர்ந்த சிவராஜ், விக்னேஷ் ஆகியோர் தலா 7.50 லட்சம் என 15 லட்சம் பணம் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சியடைந்ததாகவும், இவர்கள் சர்ச்சையில் சிக்கிய ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியதும், சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கடந்த ஜனவரி 28ம் தேதி கைது செய்தனர். இதேபோல், காஞ்சிபுரத்தை சேர்ந்த வடிவு (42), 2018ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் வெற்றிபெற்று செம்பியம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், இவர் 8 லட்சம் பணம் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சியடைந்ததாக வழக்கு பதிவு செய்து, போலீசார் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். 3 பேரும் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கின் விசாரணை நடந்து வருவதால், ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி, 3 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Tags : TNPSC ,Sessions Court , TNPSC, abuse case, 3 counts, bail plea, dismissed
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை...