×

புதிய கல்வி கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் வன்முறையை தூண்டியதாக தலைவர்கள் மீது வழக்கு

சென்னை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 3 அமைப்புகளின் தலைவர்கள் மீது வன்முறையை தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை கண்டித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஜாதி ரீதியாக தவறாக பேசியதாக தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் மீது ஐபிசி 153, 153(ஏ), 153(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் ேநற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி நடந்த ஜாதிய ஆணவ படுகொலையை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மக்கள் தமிழ்தேசிய கட்சி தலைவர் சாத்தை பாக்கியராஜ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஐபிசி 153(ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், மேலவளவு கொலை குற்றவாளிகளை கண்டித்து கடந்த நவம்பர் 22ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதி மீது ஐபிசி 153, 153(ஏ), 505(ஏ) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று அமைப்புகளின் தலைவர்கள் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Leaders , New Education Policy, Protest, Violence, Leaders, Case
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...