வெட்டுக்கிளி புராணம்

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

‘காப்பான்’ திரைப்படத்தில்  விவசாயத்தை அழிக்க வெட்டுக்கிளிகளை ஊர் முழுவதும் அனுப்ப திட்டமிடும் ஒரு நிறுவனம். அண்மையில் குஜராத்தில் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் விவசாய நிலத்தைத் தாக்கின. அப்போது இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானால் அனுப்பப்பட்டவை என சில வலதுசாரி குழுக்கள் முணுமுணுத்தன.இப்போது சோமாலியா வையும் இதுபோல லட்சக் கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கத் தொடங்கி உள்ளன. விவசாய பயிர்களைத் திட்டமிட்டுத் தாக்குவதால் அந்நாடு இதனை தேசிய அவசரநிலையாக பிரகடனப்படுத்தி உள்ளது.

ஏப்ரலில் அங்கு அறு வடைக்காலம். அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்று அந்நாட்டு விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். சோமாலியாவை மட்டுமல்ல அதன் அண்டைநாடான எத்தியோப்பியா மற்றும் கென்யா விவசாய நிலங்களையும் வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளன.  வெட்டுக்கிளி கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த ஒரு பூச்சியினம். வெளித் தோற்றத்தில் தத்துக்கிளிகள் போலிருக்கும். இதனை தத்துக்கிளிகளிலிருந்து வேறு பிரிப்பதற்காக இது குறுமுனை வெட்டுக்கிளி எனப்படும். வெட்டிக்கிளிகள் பல்வேறு நிறங்களில் உள்ளன. வேளாண்மை செய்யப்படும் பயிர்ச்செடிகளுக்குச் சேதம் விளைவிப்பதால் இது உழவர் களின் எதிரி என்று அறியப்படுகிறது.

வெட்டுக்கிளிக்குக் கணுக் களாகப் பிரிவுபட்ட மூன்று இணைக் கால்கள் இருக்கின்றன. இவற்றில் பின் இணைக் கால்கள் பிற கால்களை விட நன்கு வளர்ச்சியுடையதாக இருக்கின்றன. இந்தக் கால்கள் நீண்ட, வலிய கால்கள். இவற்றின் உதவியுடன் தரையிலிருந்து எம்பி நெடுந்தூரம் தாவிக் குதிக்கிறது. வெட்டுக்கிளியின் குறுகிய, விரைப்பான சிறகு மூடிகளுக்குள் விசிறி வடிவாக மடிக்கப்பட்ட அகன்ற சிறகுகள் இருக்கின்றன. முதிர்ச்சியடைந்த பூச்சிகள் நன்றாகப் பறக்கின்றன.  பல்வேறு நிறங்களில் உள்ளன. உலகின் சில நாடுகளில் வெட்டுக்கிளிகள் புரதச்சத்து நிறைந்திருப்பதால் உணவாக  உட்கொள்ளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மெக்சிகோவில் இவை உண்ணப்படுகின்றன. இப்படி வெட்டுக் கிளியைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்.

Related Stories: