போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ: அரியவகை மரங்கள் நாசம்; விலங்கினங்கள் ஓட்டம்

போடி: போடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவி வருவதால், அரிய வகை மரங்கள் நாசமாகின. வெப்பம் தாங்காமல் விலங்கினங்கள் ஓடி வருகின்றன. தீயை அணைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், போடி அருகே உள்ள மேற்கு மலைத்தொடர்ச்சி மலை அகமலையில் தொடங்கி வடக்குமலை, குரங்கணி, கொட்டகுடி, டாப்ஸ்டேஷன், போடிமெட்டு என தேக்கடி வரை செல்கிறது. இதில் அரியவகை மரங்கள், விலங்கினங்கள் உள்ளன.

போடி அருகே உள்ள ராசிங்காபுரம், சிலமலை, மணியம்பட்டி  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயை அணைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகின்றன.

விலங்கினங்களும் தப்பி ஓடுகின்றன. எனவே, போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் எரியும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: