×

நெடுங்கண்டம் பகுதியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு: தொல்பொருள்துறை ஆய்வு நடத்த முடிவு

கம்பம்: கேரளாவில் உள்ள நெடுங்கண்டம் பகுதியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் ஆய்வு நடத்த, தொல்பொருள் துறையினர் முடிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், நெடுங்கண்டத்தில் உள்ள செம்பக்கப்பரா, கொச்சுகாமட்சி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜன் பிலிப். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது வீட்டருகே கட்டுமானத்திற்காக நிலத்தை தோண்டினார். அதில், பண்டைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை வைத்து
 புதைக்கும் 2 முதுமக்கள் தாழி இருந்ததைக் கண்டுபிடித்தார்.இதுகுறித்து அம்மாநில தொல்பொருள்துறை மற்றும் நெடுங்கண்டத்தில் உள்ள தொல்பொருள் வரலாற்று பாதுகாப்பு குழுவினரிடம் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வந்து தாழிகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் எலும்பு எச்சங்கள் இருந்ததை கண்டனர். இதுகுறித்து அப்பகுதியில் நடத்திய ஆய்வில் இன்னும் சில முதுமக்கள் தாழி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் (என்.டி.டி.சி) தொல்பொருள் வரலாற்றாசிரியர்கள் குழு சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அப்பகுதியில் முழுமையாக ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

சோழர் கால ஆட்சியின் பெருமை
கடந்த 2017ல் இடுக்கி மாவட்டம், மேப்பாறை என்னும் இடத்தில் கோழிக்கோடு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜான் ஆய்வு செய்து, சோழர்கால சாசனத்தை கண்டுபிடித்தார். பண்டைக்கால தமிழ் பிராமி எழுத்துக்களால் பெரிய பாறையில் கொத்தி எழுதப்பட்ட, ‘ஸ்வஸ்தஸ்ரீ’ எனத் தொடங்கும் சாசனத்தில் சோழ வம்சத்தின் புகழ்பெற்ற அரசனான ராஜேந்திர சோழனின் பத்தாண்டு கால ஆட்சி பெருமைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

Tags : Nedumkandam , Olderfossil,discovery,Nedumkandam,results,archaeological survey
× RELATED நெடுங்கண்டம் பகுதியில் முதுமக்கள்...