×

8 மாதங்களுக்கு பிறகு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் : காவிரி நீர் திறப்பு, பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

டெல்லி : காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு இன்று மீண்டும் கூடியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதுகுறித்து அரசிதழிலும் வெளியிட்டது. அதைத்தொடர்து சில முறைகள் மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்பட்டு கர்நாடகா அரசுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுமார் ஒராண்டாக கூட்டம் கூட்டப்படாத நிலையில்,  25ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அருண் குமார் சின்கா தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாநில அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் திறப்பு, பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசகம் மற்றும் தொழில்நுட்பகுழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைவர் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi ,consultation ,meeting ,Cauvery ,Cauvery Management Commission , Cauvery Water, Problem, Cauvery Management Commission, Water Opening
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...