நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலாக தங்கத்தின் விலை சிறிதளவு சரிந்தது : சவரன் ரூ.552 குறைந்து ரூ.32,776க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து ரூ.32,776-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.69 குறைந்து ரூ.4,097-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.52.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தினமும் புதிய உச்சத்தில் தங்கம் விலை

தங்கம் விலை இந்தாண்டு புத்தாண்டு முதல் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த நிலைமை பிப்ரவரி மாதம் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து புதிய சாதனையை படைத்து வந்தது.அதாவது, கடந்த 17ம் தேதி ஒரு சவரன் 31,216க்கும், 18ம் தேதி சவரன் 31,408, 19ம் தேதி 31,720, 20ம் தேதி ₹31,824, 21ம் தேதி ₹32,408க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (22ம் தேதி) கிராமுக்கு ₹21 அதிகரித்து, ஒரு கிராம் ₹4,072க்கும், சவரனுக்கு ₹168 அதிகரித்து ஒரு சவரன் 32,576க்கும் விற்கப்பட்டது. 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் சனிக்கிழமை விலையிலேயே ஞாயிற்றுக்கிழமை தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,112 உயர்வு

ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. ஆனால், தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் “ஜெட்” வேகத்தில் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ₹94 அதிகரித்து ஒரு கிராம் ₹4166க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ₹752 அதிகரித்து ஒரு சவரன் 33 ஆயிரத்து 328க்கு விற்றது. ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் அதிரடியாக சவரன் ₹752 அளவுக்கு உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.தொடர்ச்சியாக கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹2,112 அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஒரு சவரன் ₹25,600க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரே ஆண்டில் (நேற்று வரை) மட்டும் சவரன் ₹7728 அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.552 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோரை சுற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.

Related Stories: