சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு அண்ணாத்த என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எந்திரன், பேட்ட படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. படத்துக்கு அண்ணாத்த என தலைப்பு வைத்துள்ளனர்.