×

வீட்டுக்குள் புகுந்து டிவி திருடியவர் கைது

தண்டையார்பேட்டை: பாரிமுனை கிளைவ்பேக்டரி பகுதியை சேர்ந்தவர் ராணி (36). இவர், கடந்த 4 நாட்களுக்கு முன், குடும்பத்துடன் திருப்பதி சென்றார். இவரது மாமனார் கோபி (75) மட்டும் வீட்டில் இருந்துள்ளார். 2 தினங்களுக்கு அங்கிருந்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் இருந்த எல்இடி டிவி திருடு போயிருந்தது. இதுகுறித்து வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் ராணி புகார் செய்தார். போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ஒரு வாலிபர் பைக்கில் டிவியை வைத்து எடுத்து சென்றது தெரியவந்தது.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (28) என்பதும், இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவரிடமிருந்து எல்இடி டிவி, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பார்த்தசாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.

Tags : house , house, Arrested, TV stealer
× RELATED வேலூர் மாவட்டத்தில் முறைகேடாக இ-பாஸ்...