×

காயலான் கடையில் பதுக்கிய செம்மர கட்டைகள் பறிமுதல் உரிமையாளர் கைது

சென்னை: காயலான் கடையில் பதுக்கிய ெசம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளரை கைது செய்தனர்.ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் முத்து (32). இவரது கடையில் செம்மர கட்டைகளுடன் மினி வேன் இருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மினி வேனில் செம்மர கட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து வேன் மற்றும் 5 அடி உயரம் கொண்ட 6 செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் முத்துவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் கோட்ட வனத்துறை அதிகாரிகளிடம் செம்மர கட்டைகளை ஒப்படைத்தனர்.மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், செம்மரக்கட்டைகளை எங்கிருந்து கடத்தி வந்தார். எங்கு கொண்டு செல்ல இருந்தது. இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Owner ,store ,garage owner ,Kaylan , Kaylan,garage, Owner arrested ,confiscating ,sheep sheds
× RELATED அரசு உத்தரவைமீறி கடை நடத்திய சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கைது