×

பிரபல கார் திருடன் கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நவீந்திரகுமார் (65). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது காரை குடியிருப்பு வளாகத்தின் கீழ்தளத்தில் நிறுத்தி இருந்தார். மறுநாள் வந்து பார்த்தபோது, கார் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அதில், ஆசாமி ஒருவர் கள்ளச்சாவி மூலம் காரை திருடி செல்வது பதிவாகி இருந்தது. அதை வைத்து, காரை திருடிய மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில், அண்ணாநகர் 4வது பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை மடக்கி, அதை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், காவல் நிலையம் கொண்டு சென்று, விசாரித்தனர். அதில், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பிரபல கார் திருடன் முருகன் (49) என்பதும், இவர், அண்ணாநகர் நவீந்திரகுமாரின் காரை திருடி ஓட்டி வந்ததும் தெரிந்தது.அவரிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : car thief , Popular car, thief, arrested
× RELATED பிரபல கார் திருடன் கைது