×

ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

தண்டையார்பேட்டை: பூக்கடை ரத்தன் பஜார் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு இந்த ஏடிஎம் மெஷினை உடைப்பது போல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, அங்கிருந்த மர்ம நபர் பொதுமக்களை  பார்த்தவுடன் ஓடினார். புகாரின்பேரில், பூக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, ஒரு ஆசாமி கார்டு மூலம் பணம் எடுக்க முயன்று, பணம் வராததால் மெஷினை உடைப்பது பதிவாகி இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.Tags : Breaking ,ATM, , rob
× RELATED ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது