வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு 1.27 கோடி தங்கம் கடத்திய 9 பேர் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: துபாப் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.27 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக 9 பேரை கைது செய்தனர்.துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரசோதனை நடத்தினர்.ராமநாதபுரத்தை சேர்ந்த சையது உசேன் (32), கமர்தான் (33), முகமதுசர்கான் (23), முகமது ஜின்னா (30), அன்சாரி (46) சுற்றுலாபயணிகள் விசாவில் துபாய் சென்று விட்டு வந்திருந்தனர். அவர்களது உடமைகளில் எதுவும் இல்லை. அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று நடத்திய சோதனையில் அவர்களது உள் ஆடையில் தங்க கட்டிகள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை 950 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ₹38.7 லட்சம்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 6.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில்இலங்கையை சேர்ந்த ரத்தினா (24) சுல்தான் சகுல்அமீது (24), சதாம் உசேன் (29), சாகுல் அமீது (63), சிவகங்கையைச் சேர்ந்த பஷீர் அகமது (35) ஆகியோரிடம் நடத்திய சோதனையில் அவர்களது உள் ஆடையில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை 2.59 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ, 88.88 லட்சம். விமான நிலைய அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து 9 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: