வங்கி மேலாளர் போல் பேசி 3 கோடி மோசடி மூவர் பிடிபட்டனர்

சென்னை: தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து வங்கியின் மேலாளர் பேசுவது போல், உங்களுக்கு கடன் வேண்டுமா? குறைந்த வட்டியில் தருகிறோம், உங்கள் வங்கிக் கணக்குக்கு ரிவார்டு பாய்ண்ட் கிடைத்துள்ளது என்று பேசி அவர்களிடம் ஏடிஎம் கார்டின் 16 இலக்க எண், சிவிவி எண் ஆகியவற்றை பெற்று, ரூ.3 கோடி அளவிற்கு பல நபரிடம் மோசடி நடந்ததாக புகார் வந்தது.இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவின் பேரில் துணை ஆணையர் நாகஜோதி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. துணை ஆணையர் பிரபாகரன் ஆய்வாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட தனிப்படையினர் தீவிர விசாரணையில், டெல்லியில் தமிழர் வாழும் பகுதியில் அப்பகுதி மக்களை பயன்படுத்தி தமிழகத்தில் பலரிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தனிப்படை போலீசார் விமானம் மூலம் டெல்லி சென்றனர். அங்கு  முகாமிட்டு டெல்லியை சேர்ந்த தீபக்குமார் (20), தேவ்குமார் (20), வில்சன் (25) ஆகிய மூன்று பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இதில் தொடர்புடைய பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக உள்ள ய முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: