×

நரிக்குடி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி மையம்: குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம்

திருச்சுழி: நரிக்குடி அருகே இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் உள்ளதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்கி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குறையறைவாசித்தான் கிராமத்தில்  அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டிடம்  மழை, வெயிலுக்கு தாக்கு பிடிக்காமல் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விழுகின்றன. மழை காலங்களில் ஒழுகுவதால் குழந்தைகளை  அமர வைக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.

மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் ஆபத்து உள்ளது. அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் புதர் மண்டியுள்ளதால் அவ்வப்போது விஷ பூச்சிகள் மையத்திற்குள் புகுந்து விடுகின்றன. அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இடியும் நிலையில் உள்ளதால் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Tags : parents ,center ,Nerikkudy ,Anganwadi , Narikkudi, Anganwadi Center, Reluctant
× RELATED கொரோனா உறுதியான பெண்ணின் பெற்றோருக்கு பாதிப்பு இல்லை