×

மூலக்கரை அருகே பகலிலும் எரியும் ஹைமாஸ்: கண்டு கொள்ளாத மாநகராட்சி

திருப்பரங்குன்றம்: மூலக்கரை அருகே அணைக்க ஆளில்லாமல் ஹைமாஸ் விளக்கு பகல் முழுதும் எரிந்து கொண்டிருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகே திருப்பரங்குன்றம் - திருமங்கலம் சாலை சந்திப்பு அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு கடந்த சில நாட்களாக தினமும் பகலில் எரிந்து கொண்டிருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சியிடம் பல முறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பகலில் எரியும் ஹைமாஸ் விளக்கை அணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Burning Hymns ,The Unexpected Corporation ,Daylight ,Source ,Burning Hyams ,Daylight Source , Source, Hymas, Corporation
× RELATED மூலக்கரை அருகே பகலிலும் எரியும் ஹைமாஸ் விளக்கு கண்டு கொள்ளாத மாநகராட்சி