×

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மருத்துவ கல்லூரி பேராசிரியை சாந்தா அருள்மொழி, நாமக்கல் மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியை அரசி ஸ்ரீவத்சன் திருவள்ளூர் மருத்துவ கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியை வள்ளி சத்யமூர்த்தி திருப்பூர் மருத்துவ கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மருத்துவ கல்லூரி பேராசிரியை ரேவதி விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர் விஸ்வநாதன் நாகை மருத்துவ கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : government ,Tamil Nadu ,Tamil Nadu Medical Colleges Tamil Nadu ,schools , Tamil Nadu, Medical College, CM, Government of Tamil Nadu
× RELATED விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை...