உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்வையிட்ட அதிபர் ட்ரம்ப் குடும்பம் : தாஜ்மகாலின் தொன்மை, சிறப்புக்கள் குறித்து கேட்டறிந்தார்

லக்னோ : அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஆக்ரா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் மனைவி மிலானியாவுக்கும் ஆக்ராவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆக்ரா விமான நிலையத்தில் டிரம்ப்பை உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர். பள்ளி மாணவ மாணவியர்கள் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் டிரம்ப் தம்பதியை வரவேற்றனர். பின்னர் ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகாலுக்கு டொனால்ட் டிரம்ப் புறப்பட்டனர்.

சுமார் 5 மணி அளவில் தாஜ்மகாலை அதிபர் ட்ரம்ப் சென்று அடைந்தார். மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் மருமகனுடன் தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.தாஜ்மகாலில் பார்வையாளர் பதிவேட்டில் தமது கருத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி பதிவிட்டனர்.தொல்லியல் துறையை சேர்ந்த தலைமை ஆய்வாளர், உலக அதிசயமான தாஜ்மகாலின் தொன்மை மற்றும் சிறப்புக்கள் குறித்து ட்ரம்ப் குடும்பத்தினரிடம் விளக்கினார்.அத்துடன் தாஜ்மகாலுக்கு முன்பாக மனைவி மெலனியாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் ட்ரம்ப், அமெரிக்க அதிபர் டிரம்ப் தாஜ்மகாலை பார்வையிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை.

Related Stories: