×

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் இன்று மாநில முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி தன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமை செயலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரசு இல்லங்களில் தங்கியுள்ள ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கட்சி கொடியை ஏற்றிய இருவரும், பிறந்தநாள் கேக்கை வெட்டி,  நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

இதற்கிடையே, சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பரிசாக அணிவித்தார். மேலும், பல்வேறு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் அதிமுக நிர்வாகிகள் பரிசு பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

Tags : 72nd Birthday: A Gold Ring for Children ,Jayakumar Gives Children a Gold Ring Jayalalithaa , Jayalalithaa's 72nd Birthday: A Gold Ring for Children
× RELATED கொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்