×

பெண்கள் அச்சமின்றி, இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வகையில் தமிழகம் பாதுகாப்பாக உள்ளது : முதல்வர் பழனிசாமி பெருமிதம்

கோவை : குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி சட்டமன்றத்தில் தாம் தெளிவுப்படுத்தி விட்டதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்துள்ளார். மேலும் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குற்றங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. ஜெயலலிதா விழா இருப்பதால் டிரம்பை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு தாம் செல்லவில்லை . என்றார்.

தொடர்ந்து முதல்வர் பேசுகையில்,மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று முதல் அமலுக்கு வந்தது.பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பெண்கள் அச்சமின்றி, இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வகையில் தமிழகம் பாதுகாப்பாக உள்ளது.பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரம் கோவை என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதனாலேயே அனுமதி வழங்கப்படுகிறது. அதிமுக அரசு எந்தவித கட்டுப்பாடும் விதிக்காது. 2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியே தொடரும். 7 பேர் விடுதலையில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆளுநர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் அரசு உறுதியாக உள்ளதுஇவ்வாறு அவர் கூறினார்.


Tags : road ,Women ,Principal Palanisamy , Chief Minister Palanisamy, Coimbatore, Citizenship, Minorities, Jayalalithaa
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி