நாட்டின் பெருமையை எடுத்துக்கூறிய அதிபர் டிரம்புக்கு நன்றி : இந்தியா - அமெரிக்க நட்புறவு வாழ்க என்ற முழக்கத்துடன் பிரதமர் மோடி நன்றி உரை

அகமதாபாத்: அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல்  மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனது உரையை தொடங்கும் முன் நமஸ்தே டிரம்ப், டிரம்ப் நீடுழி வாழ்க என முழக்கமிட்டார் பிரதமர் மோடி.பிரதமர் மோடியை தொடர்ந்து அரங்கில் கூடியுள்ள மக்களும் நமஸ்தே டிரம்ப், டிரம்ப் நீடுழி வாழ்க என முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து *நமஸ்தே என்று கூறி உரையை துவக்கினார் டிரம்ப். அப்போது பேசிய அவர், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் ஒற்றுமையாக வசிக்கின்றனர் என்றும் இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது. இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் மனதை நெகிழ வைக்கும் அளவிற்கு உரை நிகழ்த்தினார்.

Advertising
Advertising

ட்ரம்ப் உரையை தொடர்ந்து பிரதமர் மோடி நன்றியுரை வாசித்தார். அவர் பேசியது பின்வருமாறு..

*இந்தியா, அமெரிக்கா உடனான நட்புறவு நம்பிக்கை அடிப்படையில் ஆனது.அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்தியாவின் உண்மையான நண்பர் இருக்கிறார்.இந்திய - அமெரிக்க உறவில் அதிபர் ட்ரம்பின் வருகை புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது.

*நாட்டின் 130 கோடி மக்களும் புதிய இந்தியாவை படைத்து வருகின்றனர். ஜனநாயகத்தை பலப்படுத்த பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. முத்தலாக்குக்குத் தடை, பேறுகால விடுப்பு உள்ளிட்டவை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

*அமெரிக்கா மீது, இந்தியா மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறது. இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் கூறியது அனைத்தும் உண்மை தான். டிரம்பின் வருகை, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் பெருமை,இரு நாட்டுடைய நட்பு,அசைக்க முடியாத நட்பு. இந்த நட்புறவினால், அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளது.

*ராணுவத்துறையில் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டாளி நாடு அமெரிக்கா.இந்தியா - அமெரிக்கா இடையில் புதிய வாய்ப்புகளுக்கான வாயில்களை டிரம்பின் வருகை திறந்துவிடும்.

*விவேகானந்தர், மகாத்மா காந்தியை குறிப்பிட்டு பேசிய டிரம்புக்கு நன்றி.இந்தியாவின் பெருமையை எடுத்துக்கூறிய டிரம்புக்கு நன்றி.

*விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் பேசியுள்ளார்.

*இந்தியா - அமெரிக்கா இடையிலான நம்பகத்தன்மை அதிகமாகியுள்ளது.130 கோடி இந்தியர்கள் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்கி வருகிறோம்

*இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி அமெரிக்கா.இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளி அமெரிக்கா.

*அமெரிக்காவுடன் தகவல் தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளோம்.

*விளையாட்டுத்துறையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட உள்ளோம்

*டிரம்பின் இந்திய வருகை புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. புதிய இந்தியாவில் அமெரிக்காவிற்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன

*இந்தியா - அமெரிக்கா நாடுகள் இயற்கையான கூட்டாளிகள். உலக அமைதி மற்றும் பாதுகாப்பில் 2 நாடுகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

*இந்தியா - அமெரிக்க நட்புறவு வாழ்க என்ற முழக்கத்துடன் உரையை முடித்துக் கொண்டார் பிரதமர் மோடி.

இந்திய மண்ணில் கால் பதித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார்.அதன் பின்னர் டிரம்ப் இணையருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இணைந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அமெரிக்க அதிபர், இரு புறமும் அரங்கேறிய பாரம்பரிய நடனங்களை பார்வையிட்டார்.பின்னர் அங்கு தயாராக நின்றிருந்த பீஸ்ட் காரில் ஏறி அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் சபர்மதி ஆசிரமம் நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழி எங்கும் அவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. சபர்மதி ஆசிரமத்தை வந்தடைந்த ட்ரம்ப் தம்பதிக்கு, அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த பிரதமர் மோடி கைத்தறி துண்டு அணிவித்து வரவேற்றார்.தொடர்ந்து ஆசிரமத்திலுள்ள நூல் நூற்கும் ராட்டை குறித்து பிரதமர் மோடி, ட்ரம்ப் தம்பதியினருக்கு விளக்கி கூறினார். அவரை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் ராட்டையை இயக்குவது குறித்து எடுத்துக் கூற, அமெரிக்க அதிபர் மனைவி மெலானியாவுடன் இணைந்து ராட்டையை இயக்கினார்.சபர்மதி ஆசிரம நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேராவுக்கு அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் புறப்பட்டு சென்றனர்.

Related Stories: