×

அமெரிக்க அதிபர் இந்தியா வருகை எதிரொலி: சமூக வலைதளத்தை கைப்பற்றிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்...#NamasteyTrump ஹேஸ்டேக் இந்தியளவில் முதலிடம்

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்துள்ளதை டுவிட்டரில் பலவித ஹேஸ்டேக்குளுடன் நெட்டிசன்கள் டிரண்ட் ஆக்கியுள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக இந்தியா வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது  மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோரும் தனி  விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வர‌வேற்பு அளிக்கப்பட்டது. அகமதாபாத்தில் வந்து  இறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு குஜராத் பாரம்பரிய முறைப்படி சங்கொலி முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேளதாளங்கள் முழங்க ட்ரம்புக்கு குஜராத்  பாரம்பரிய கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர்.அகமதாபாத் விமானநிலையம் வந்தடைந்த அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் சபர்மதி ஆசிரமம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். டிரம்ப் உடன் அவரது  மனைவி மெலனியாவும், மகள் இவாங்காவும் சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் சென்ற  அதிபர் டிரம்ப்பிறகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் மொதேரா மைதானத்தின் நுழைவு  வாயிலில் அதிபர் ட்ரம்பிற்கு ஒட்டகங்கப் படை வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப்  நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமூக வலைதளம் முழுவதிலும் எங்கும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் புகைப்படங்களாக பரவிவுள்ளது. NamasteyTrump,  TrumpInIndia, IndiaWelcomesTrump, Welcome to India, Welcome Sir, TrumpIndiaVisit, TrumpModiMeet, WelcomeTrump,  Ahmedabad, नमस्तेTrump, உள்ளிட்ட ஹேஸ்டேக்குகள் இந்திய அளவிலான டுவிட்டர் டிரண்டிங்கில் முதன்மை இடத்தில் உள்ளது.

Tags : Modi ,Trump ,visit ,President ,India ,US , Echoing US President's visit to India: Prime Minister Modi capturing social network, President Trump ... #NamasteyTrump
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...