×

மாரத்தான் போட்டி ஒருங்கிணைப்பு பணி லாரி மீது பைக் மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் சாவு

புழல்: செங்குன்றம் அருகே மாரத்தான் போட்டியை ஒருங்கிணைத்த பள்ளி மாணவர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் எம்.ஏ.நகரில் உள்ள தனியார் பள்ளி சார்பில், வைட்டமின் சத்து குறித்த மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்பி அரவிந்தன், பொன்னேரி ஏஎஸ்பி பவன்குமார் இதனை துவக்கி வைத்தனர். முன்னதாக போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணியை, அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பெரியபாளையம், கன்னிகைப்பேர் அடுத்த திருக்கண்டலம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சுரேந்தர் (17), சோழவரம் அடுத்த சோத்துபெரும்பேடு பகுதியை சேர்ந்த தனுஷ் பாலாஜி (17) ஆகியோர் மேற்கொண்டனர்.

இவர், இருவரும் ஒரே பைக்கில் எடப்பாளையம் ராம் நகர் அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. இதில் சுரேந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனுஷ் பாலாஜி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ்பாலாஜி இறந்தார். சோழவரம் போலீசார், சுரேந்தர், தனுஷ் பாலாஜி சடலங்களை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Tags : schoolchildren ,Marathon Competition , Marathon Competition, Coordinating Work
× RELATED ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!!