பலருடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் அபாயம் சமுதாயத்தை சீரழிக்கும் செயலியாக மாறுகிறதா டிக் டாக்?: பல குற்றங்களுக்கு காரணியாக உள்ள இதுபோன்ற ‘ஆப்’களை தடை செய்தால் மட்டுமே தீர்வு

டிஜிட்டல் உலகில் எவ்வளவோ பயன்கள் உள்ளன. ஆனால், அபாயங்கள், விபரீதங்களும் உண்டு. இப்படிதான் சமுதாயத்தை சீரழிக்கும் செயலியாக மாறி வருகிறதோ என்ற சந்தேகம் டிக் டாக் ஆப் மீது ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 150  கோடி பேர் டிக் டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் 5 கோடி பேர் இந்தியர்கள். பல நாடுகளில் டிக் டாக் செயலியை நல்ல விஷயங்களுக்கு, விழிப்புணர்வுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்ைத பொறுத்தவரை, குக்கிராமங்கள் வரை டிக் டாக் புற்றீசல் போல பரவி உள்ளது. 15 விநாடிகளில் பரபரப்பை ஏற்படுத்தி விடலாம் என்பதால் பலரையும் ஈர்த்து வருகிறது. இதற்கு பெரும்பாலும் பலி வாங்கப்படுவது பெண்கள்தான். பெரம்பலூர்: சிங்கப்பூரில் கைநிறைய சம்பாதிக்கும் கணவன். மனைவி டிக் டாக்கில் வெறியாக இருப்பவர். வேண்டாம் நமக்கு என்று சொல்லிப் பார்த்தார்; திட்டிப்பார்த்தார்; விளைவு, விஷம் குடித்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு தற் ெகாலை செய்தார் மனைவி  அனிதா.

விழுப்புரம்: நான்காண்டு  முன்பு காணாமல் போன கணவன் சுரேஷ், திருநங்கையுடன் டான்ஸ் ஆடிய டிக்டாக்  வீடியோ வெளியானதை அடுத்து அதிர்ந்தார் காதல் மனைவி ஜெயப்ரதா; போலீசில் புகார் செய்தார். சிவகங்கை: நகைகளுடன் தோழியுடன் வீட்டை விட்டு வெளியேறினார் பெண். போலீசில் புகார் செய்தார் கணவன்; என் தோழி தான் அவர் என்று கதறினார் மனைவி டிக்டாக் வீடியோவில். இப்படி தமிழகம் முழுக்க டிக் டாக் வீடியோக்களால் ஏகப்பட்ட விபரீத சம்பவங்கள். பல அப்பாவி பெண்கள் வேடிக்கையாக பார்க்க ஆரம்பித்து, வாழ்க்கையை தொலைக்கும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. தடை செய்யலாமா  என்று ஐகோர்ட்டும் கேட்டு விட்டது. சமுதாயத்தை சீரழிக்கும் செயலியாக மாறி வருகிறதா டிக் டாக் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. இதோ நான்கு திசைகளில் அலசல்:

Related Stories: