×

டிக்டாக்குக்கு அடிமையாகும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: இளம்பரிதி, வழக்கறிஞர்

டிக்டாக் செயலியில் நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புற குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு டிக்டாக் செயலி குக்கிராமம் வரை சென்று அதன் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த டிக்டாக் செயலி சீனாவில் இருந்து வந்தது. சீன பட்டாசை விட இந்த செயலி தான் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியாவில் வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், இந்த  செயலியை பயன்படுத்த அமெரிக்காவில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கட்டுப்பாடு உடன் இந்த டிக்டாக் செயலி செயல்படுகிறது. . நீதித்துறையும், சட்டத்துறையும் இப்ேபாது நாட்டை காப்பாற்ற புதுப்புது சட்டம் இயற்ற வேண்டிய சூழல் உள்ளது. அந்த அடிப்படையில் டிக்டாக் செயலியை தணிக்கை செய்யும் நடைமுறை இல்லாததால் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதால்,  இது சமூக கட்டமைப்பை தகர்த்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கணவன், மனைவிக்கு இடையே டைவர்ஸ் செய்ய பல காரணங்கள் இருந்தது. கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை, மனைவி மீது சந்தேகப்படுவது உள்ளிட்ட பல  காரணங்கள் இருந்தது. ஆனால், தற்போது, என் மனைவி எந்த நேரமும் டிக்டாக் செயலியில் இருக்கிறார். குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறார். அதனால், அவரிடம் இருந்து டைவர்ஸ் கொடுங்கள் என்று நீதிமன்றத்துக்கு வரும் நிலை  ஏற்பட்டுள்ளது. 10 பெண்களில் 2 பெண்கள் டிக்டாக்கிற்கு அடிமையாகி உள்ளனர். விரைவில் பிரபலமாக  வேண்டும். தன்னை புகழ வேண்டும் என்பதற்காக குடும்பத்தை கவனிக்காமல் யாரோ ஒருவர் லைக் போட வேண்டும் என்பதற்காக ஒரு  மாயையில் சிலர் குறிப்பாக பெண்கள் அதிகமாக இருக்கின்றனர்.  

எந்த ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தன்னை பாராட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். அந்த பாராட்டு எந்த வகையில் இருக்க வேண்டும் என்று தெரியாமல் டிக்டாக் செயலியில் ஆபாசமாக பதிவு செய்ய தொடங்கி  விட்டனர். ஆரம்ப காலத்தில் டிக்டாக் செயலி வந்த போது, நாகரீகமான பதிவாக இருந்தது. சினிமா பாட்டுக்கு நடனமாடுவது, நடிப்பது என்று தான் இருந்தது. ஆனால், டிக்டாக் செயலியை பயன்படுத்தும் நண்பர்கள் இடையே போட்டி அதிகமாகி  விட்டதால் சினிமாவில் வருவதை விட அரைகுறை ஆடையுடன் ஆட தொடங்கி விட்டனர். தன்னை சுற்றி ஒரு சமூகம் இருக்கிறது. அனைவரும் பார்க்கின்றனர் என்பதை மறந்து டிக்டாக் செயலி சமூகத்தை சீரழித்து வருகிறது. குழந்தைகள் முதல் வயதானோர் வரை இதற்கு அடிமையாகி விட்டதால், தற்போதைய சூழ்நிலையில்  சமூகத்தை சீர்திருத்த வேண்டும் என்று விரும்பினால், உடனடியாக டிக் டாக் செயலியை ஒடுக்க வேண்டும். இல்லையெனில் அமெரிக்கா போன்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அதே போன்று, டிக்டாக் செயலிக்கு கடுமையான கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். இந்த டிக்டாக் செயலியை பயன்படுத்த வயது வரம்பு கொடுக்க வேண்டும்.  99 சதவீதம் தீமை தரக்கூடிய டிக்டாக் செயலியால் சமூகத்துக்கு எந்த பலனும் இல்லை. எனவே, ஆபாசமாகவும், அவதூறாகவும் டிக் டாக் செயலியை பதிவு செய்யும் போது, அதை தணிக்கை செய்து அதன்பிறகு அந்த வீடியோ பதிவாகும்  நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதில், எந்த தவறும் இல்லை. இது போன்ற செயலிகளை பயன்படுத்தி சாதி, மதம் தொடர்பாக பதிவு செய்கின்றனர். இதற்கு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, இளைஞர்கள் விழிப்புடன் இருந்து கொண்டு இது  போன்று பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், இது போன்ற பதிவுகளை அந்த டிக் டாக் நிறுவனம் தணிக்கை செய்து பதிவு செய்ய அனுமதிப்பதற்கு அரசு கட்டுபாட்டை விதிக்க வேண்டும்.டிக்டாக் செயலியை பயன்படுத்தும் நண்பர்கள் இடையே போட்டி அதிகமாகி விட்டதால் சினிமாவில் வருவதை விட அரைகுறை  ஆடையுடன் ஆட தொடங்கி விட்டனர்.




Tags : lawyer ,women , addicted ,dicta, women, Adolescent, lawyer
× RELATED ஆட்டோ கவிழ்ந்து 4பெண்கள் காயம்