ஆபாச வீடியோக்கள் சைபர் கிரைம் கண்காணிப்பு: டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்

டிக்டாக் செயலியில் தவறான வீடியோக்கள் வந்தால் உடனே நீக்கி விடுகிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் அந்த நிறுவனம் சார்பில் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். அந்த உத்தரவாதம் பேரில் தான் அனுமதி வாங்கினார்கள். இந்த டிக்டாக் செயலியில் குழந்தைகள் முதல் வயதானோர் வரை அடிமையாகும் போது சைக்காலஜி சப்போர்ட், கவுன்சிலிங் தேவைப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரு செயலி வரும் போது டிரெண்டிங் இருக்கும். தற்போது வாட்ஸ் அப்  பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மில்லியனை அடைந்து விட்டார்கள். முதலில் வாட்ஸ் அப் வந்த போது அதன் பயன்பாடு இல்லை. முன்னேறிய காலக்கட்டத்தில் எது முன்னேற்றத்திற்கான பகுதி, எது மோசமான பகுதி என்பதை பார்க்க  வேண்டும். முன்னேற்றத்திற்கான பகுதி என்ன வென்றால், டிக்டாக் செயலி மக்களிடம் நல்ல விதமாக கொண்டு செல்ல வேண்டும். டிக் டாக்கை பயன்படுத்தி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை அணுகி நாங்கள் நல்லது தான்  செய்கிறோம். எனவே, எங்களை அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. அதன்படி தான் டிக் டாக் செயலிக்கு அனுமதி கொடுத்தோம் டிக்டாக் செயலியில் தவறு நடக்கும் போது, எந்த விதத்தில் நடந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும். டிக்டாக் செயலி தொடர்பாக மத்திய அரசு, குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் உள்ள  ஆணையத்தில் இருப்பவர்களிடம் கருத்து  கேட்டு இருக்கிறார்கள். இதற்கான நடவடிக்கையை ஒரு மாதம் முன் கூட்டியே ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த டிக்டாக் செயலியால் ஏற்படும் நல்லது, கெட்டது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். டிக்டாக் தொடர்பாக புகார் வந்ததால் தான் கருத்து கேட்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. மத்திய அரசு கருத்து கேட்டது  மெஜாரிட்டியான மக்களுக்கு தெரியாது. கமிஷனில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். சொல்லப்போனால் செல்போன் பயன்படுத்துவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும், அதனை பயன்படுத்தும் பெரியவர்கள், சிறியவர்கள் எத்தனை  பேர் என்பதை துல்லியமாக எடுக்க முடியாது. யார், அம்மா அப்பா செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கண்டுப்பிடிப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல. டிக்டாக் செயலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் புகார் அளித்தால் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்கும். டிக்டாக்கில் அடிமையாகிறார்கள்... சாதி ரீதியான பதிவுகளை டிக்டாக்கில் போடுகிறார்கள்  என்றும் தகவல் வருகிறது. ஆதாரத்துடன், அதாவது, எத்தனை பேர் அதனை பார்த்துள்ளார்கள் என்ற விவரத்துடன் புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.

சென்னை நகரத்தில் பார்த்தீர்கள் என்றால், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள், அதனை பிறருக்கு பார்வேர்ட் செய்பவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவர்கள் சென்னை,  திருச்சி, கோவையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மாதிரி விஷயத்தில் தமிழகத்தில் உள்ள சைபர் கிரைம் பவர் புல்லாக இருக்கிறது. டிக் டாக் ஆபாச வீடியோக்களை சைபர் கிரைம்  பிரிவு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதே  போல் டிக்டாக்கால் பாதிப்பு என்று கவனத்திற்கு எடுத்து வந்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல நீதிமன்றத்திலும் நல்லது செய்வோம் என்று டிக்டாக் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. அவ்வாறு மீறினால்  கோர்ட் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கவும் செய்யலாம்.டிக் டாக் செயலி மக்களின் நன்மைக்கே என்று தான் அந்த நிறுவனம் கூறி வருகிறது. ஆனால், டிக் டாக் செயலியால் பாதிப்பு இருப்பதாக ஆதாரமாக இருந்தால் அவர்கள் மீது ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.நீதிமன்றத்திலும்  நல்லது

செய்வோம் என்று டிக்டாக் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. அவ்வாறு மீறினால் கோர்ட் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கவும் செய்யலாம்.

Related Stories: