×

களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு என்ஐஏ அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

நாகர்கோவில்: களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு ஆவணங்கள் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கடந்த ஜனவரி 8ம் தேதி இரவு 9.30 மணியளவில் களியக்காவிளை அருகேயுள்ள சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்தபோது தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர்.  இதுதொடர்பாக தக்கலை அருகே திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், மாலிக்தினார் நகரை சேர்ந்த தவுபிக் ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர்.வழக்கு விசாரணையின்போது, தீவிரவாதிகள் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி உள்ளிட்ட பொருட்கள் கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழும்  இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இவர்களின் வெளிநாட்டு தீவிரவாதிகள் தொடர்பு, தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு போன்றவையும் வெளிச்சத்திற்கு வந்திருந்தன. எனவே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)க்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகி  இருந்தன. தமிழக அரசும் இதற்கான பரிந்துரையை செய்திருந்தது.இந்தநிலையில், கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்ஐஏ பிரிவின் எஸ்.பி ராகுல் தலைமையிலான அதிகாரிகளிடம் விசாரணை ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குமரி மாவட்டத்தில்  தங்கியிருந்து விசாரணை மேற்கொள்ள வசதியாக, தக்கலையில் தனி அலுவலகம் ஒன்றையும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி குமரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் விசாரணையை மேற்கொள்வார்கள்.

Tags : SSI Wilson ,NIA , SSI Wilson, murder , NIA, officials
× RELATED பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே...