மதுரை எம்பி வலியுறுத்தல் சங்ககால வாழ்விட பகுதியாக கீழடியை அறிவிக்க வேண்டும்

மதுரை: மதுரை, தத்தனேரியில் சுகாதார விழாவை சு.வெங்கடேசன் எம்பி நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதுவரை தமிழகத்தில்  ஒரு புவி மையத்தில் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. ஆனால் கீழடியில் மட்டும்தான் ஆறு கட்டங்களாக வெவ்வேறு இடங்களில் அகழாய்வு நடந்து வருகிறது. அதனால் கீழடி மற்றும் அருகில் உள்ள பகுதி முழுவதையும் சங்ககால வாழ்விட  பகுதியாக அறிவிக்க வேண்டும். அங்கு அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும். கீழடியில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில், உலகத்தரத்தில் தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்று தகவல்களை பேழை வடிவத்தில் அமைக்க  வேண்டும். வரலாறு, மானுடவியல், இலக்கியம், அகழாய்வு உள்ளிட்டவை, துறை அறிஞர்களை கொண்டு குழு அமைத்து, அந்த குழுவினரின் ஆலோசனைப்படி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: