வாரணாசி அருகே ஒரு ‘கீழடி’ பனாரஸ் பல்கலை கண்டுபிடிப்பு: 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாரணாசி அருகே பாபானியாவ் கிராமத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் புதைந்து கிடைப்பதை பனராஸ் பல்கலையின் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள பாபானியாவ் கிராமம். இங்கு கட்டிடம் அமைக்க குழி தோண்டும்போது பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து இங்கு பனராஸ் பல்கலையின் பண்பாடு மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஒரு கோயில் புதையுண்டு இருந்தது. இது 5 அல்லது 8ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும், இங்கு கண்டெடுக்கப்பட்ட பானைகள் 4 ஆயிரம் ஆண்டு காலம் பழமையானது என்றும், சுவர்கள் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று பனராஸ் பல்கலை பேராசிரியர் தூபே தெரிவித்துள்ளார்.

இங்கு கண்டெடுக்குப்பட்ட இதர பொருட்களை ஆய்வு செய்தபோது, அவை அணைத்தும் 3 ஆயிரம் முதல் 4 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. இது வாரணாசியைப்போல் சிறு நகரமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இங்கு அகழாய்வு பணிகள் முடிந்த பிறகே, இந்த இடத்தை பற்றிய முழு விவரம் தெரியவரும் என தேசிய அருங்காட்சியக தலைவர் மணி கூறியுள்ளார்.

Related Stories: