×

தலைவர் பதவிக்கு நவீன் பட்நாயக் மனுத்தாக்கல்

புவனேஷ்வர்: பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்காக மீண்டும் அக்கட்சியின் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன பட்நாயக் நேற்று மனுத்தாக்கல் செய்தார். பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல், நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்காக பிஜூ ஜனதா தளத்தின் இப்போதைய தலைவர் நவீன் பட்நாயக், புவனேஷ்வரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்து மனுத்தாக்கல் செய்தார். அப்போது, அவரது கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் அனைவரும் உடனிருந்தனர். பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவராக, அதன் தொடக்கத்தில் இருந்து (1997) நவீன் பட்நாயக் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. நவீன் பட்நாயக்கை தவிர வேறு யாரும் கட்சியின் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என்பதால், அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Naveen Patnaik ,chairmanship ,The Post ,Petitioner , post of Chairman, Naveen Patnaik, Petitioner
× RELATED ஒடிசாவில் பா.ஜ, பிஜூஜனதா தளம் கூட்டணி முறிந்தது