தங்கம் விலை உயர்வை சமாளிக்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தங்கத்தின் விலை ஒரு பவுன் ₹32,576 என்ற அளவுக்கு உயர்ந்திருப்பதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்தவுள்ள ஏழை  மற்றும் நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.சீனாவை வதைத்து வரும் ெகாரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் தொழில் மற்றும் ஏற்றுமதி துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் பங்கு சந்தையில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் சூழலில், முதலீட்டாளர்கள்  பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை வாங்கிக் குவித்து வருவது தான் இந்நிலைக்கு காரணம் ஆகும்.

இதில் இன்னொரு உண்மை என்னவென்றால், ஆசியாவிலேயே இந்தியாவில் தான் தங்கத்தின் விலை அதிகம். இதற்கு காரணம் தங்கத்தின் மீது வசூலிக்கப்படும் அளவுக்கு அதிகமான இறக்குமதி வரி தான்.தேசிய ஜனநாயகக் கூட்டணி  ஆட்சிக்கு வந்தால் தங்கம் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமின்றி, கடந்த ஆண்டு மோடி தலைமையிலான அரசு  இரண்டாவது முறையாக பதவியேற்ற உடன் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.50% ஆக அதிகரித்தது. ஏழை மக்களும் கண்டிப்பாக வாங்க வேண்டியதாக இருக்கும் தங்கத்தின் மீது இவ்வளவு வரிகளையும், சேதத்தையும் திணிப்பது  நியாயமல்ல. தங்கம் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்கவோ, கணிசமாக குறைக்கவோ அரசு முன்வர வேண்டும்.

Related Stories: