×

'யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள்'என்று கூறிய சிறுவனின் முகத்தில் புன்னகை: மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன் ரக்பி மைதானத்திற்குள் வந்த குவாடன்

கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் பெற்றுவருகிறது, குவாடன் பெய்லஸ் என்னும் சிறுவனின் வீடியோ. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன், எலும்பு வளர்ச்சி குறைவு நோய் பாதிப்புடையவர். இதனால் தலை மட்டும் பெரியதாகவும் உயரம் குறைவாகவும் இருக்கிறான் அந்தச் சிறுவன். இதனால் தான் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளான். பலமுறை மனமுடைந்து வந்த அவனை அவரது தாயார் யர்ராகா பெய்லஸ் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவந்தார்.

ஆனால், சமீபத்தில் இந்த கேலி கிண்டலால் மிகவும் உடைந்துபோன அவன், யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள்! எனக்கு ஒரு கயிறு கொடுங்கள், நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கதறியிருக்கிறான். இந்த வீடியோவை அவரது தாயார் கேலி மற்றும் கிண்டலுக்கு எதிரான கடும் விமர்சனத்துடன் வெளியிட, சமூக வலைதளங்களில் உலகமெங்கும் இருக்கும் மக்கள் பலரையும் சென்றுசேர்ந்தது அவனின் குரல். அதற்கு செவிசாய்த்து, பலரும் குவாடனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல, ஹூக் ஜாக்மேன் ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் பிரபலங்கள் வரை பலரும் இதுகுறித்து பேசிவருகின்றனர்.

#iStandWithQuaden என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் வைரலானது. National Rugby League வீரர்கள், குவாடனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டனர். குவாடனை அவர்களோடு மைதானத்தில் அழைத்துக் கௌரவிக்க ஆசைப்பட்டனர். அதை நேற்று நிறைவேற்றியும் உள்ளனர். மைதானத்தில் ஜெர்ஸி அணிந்த குவாடன், கேப்டன் ஜோயல் தாம்ப்சன் கையைப்பிடித்து முன்னே செல்ல, ஆல்ஸ்டார்ஸ் ரக்பி அணி பின்வந்தது. இதுகுறித்துப் பேசிய குவாடனின் தாயார் யர்ராகா பெய்லஸ், மிகவும் மோசமான நாள்களிலிருந்து அவன் வாழ்வின் சிறந்த நாள்களாக இவை மாறிவருகின்றன என்று தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன் ரக்பி மைதானத்திற்குள் வரும் குவாடனின் இந்த புகைப்படம் நெட்டிசன்களின் இதயங்களைக் கொள்ளைகொண்டுள்ளது.

Tags : someone ,Quadan , Smiling, Rugby Ground, Quadan
× RELATED சிறையில் இருப்பவரை ஜாமீனில்...