பவானிசாகர் அருகே பூட்டியே கிடக்கும் சோதனைச்சாவடி: காவல் காக்கும் போலீசார் தொப்பி

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே இரு மாவட்ட எல்லையில் உள்ள காவல் சோதனைச்சாவடி பூட்டிக்கிடக்கும் அவல நிலை உள்ளது. போலீசார் பணியில் இல்லாத நிலையில் போலீசாருக்கு பதிலாக  மேசை மீது காவலுக்காக தொப்பி வைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஈரோடு மற்றும் கோவை மாவட்ட எல்லையில் உள்ள பெரிய கள்ளிப்பட்டியில் காவல்துறை சோதனைச்சாவடி உள்ளது. இரு மாவட்ட எல்லை என்பதால், இந்த சோதனைச்சாவடியில் பவானிசாகர் போலீசார் 24 மணி நேரமும் பணியிலிருந்து வாகனங்களை தணிக்கை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த சோதனைச்சாவடிக்கு போலீசார் பணியில் இருப்பதில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக காவல் சோதனைச்சாவடி பூட்டியே கிடக்கிறது.

சோதனைச்சாவடி முன்புள்ள மேஜையில் போலீசார் பணியில் இல்லாத நிலையில் காவலரின் ஒரு தொப்பி மட்டும் மேசை மீது வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் போலீசார் பணியில் இல்லாததால், பல்வேறு கடத்தல் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சோதனைச்சாவடிக்கு உடனடியாக போலீசார் நியமித்து 24 மணி நேரமும் வாகன தணிக்கை செய்ய வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது. மாவட்ட எல்லையில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடியில் போலீசார் பணியில் இல்லாத நிலையில் மேசை மீது தொப்பி வைத்து காவல் காக்கும் அவல நிலை உள்ளது.

Related Stories: