×

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தனிப்படை போலீஸ்

நெல்லை: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏவிடம் தனிப்படை போலீஸ் ஒப்படைத்தது. வில்சன் கொலை வழக்கு விசாரணைக்காக தக்களையில் தனி அலுவலகம் திறக்க உள்ளது என்ஐஏ. கடந்த மாதம் 8-ம் தேதி களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் மீண்டும் 15 நாள் நீதிமன்றக்காவல் விதித்திருந்தது. 10 நாள் காவல் முடிவடைந்த பிறகு கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், துல்பீக் இருவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ.வில்சன் கடந்த 8-ம் தேதி இரவு பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த அன்று இரவு முழுவதும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் போலீஸை கொலை செய்தவர்கள் பயங்கரவாதிகள் தெளஃபிக், அப்துல் சமீம் எனத் தெரியவந்தது. அவர்கள் கொலை செய்துவிட்டு பள்ளிவாசல் வழியாகத் தப்பி ஓடும் சி.சி.டி.வி காட்சிகளும் பதிவாகின.

இதையடுத்து தமிழகம் மற்றும் கேரளா போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர விசாரணைக்குப் பிறகு கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து தெளஃபிக், அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கன்னியாகுமரி மாவட்டம் அழைத்து வந்த போலீஸார் 16-ம் தேதி களியக்காவிளை மற்றும் தக்கலை காவல் நிலையங்களில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அன்று இரவு குழித்துறை கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். கன்னியாகுமரி சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.Tags : Esesai ,murder ,NIA ,Wilson ,Essai The Police , Esesai , police handed, over documents, Wilson murder , NIA
× RELATED 2 ஆண்டுகளான நிலையில் பழைய பத்திரங்களை...