மத்திய அரசு வழக்கறிஞருக்கு அமைச்சர் கண்டனம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது தொடர்பான வழக்கில், மத்தியஅரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள வழக்கறிஞர் தனது வரம்பை மீறி பேசியிருக்கிறார். 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின்மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

அது பற்றி , மத்தியஅரசின் வழக்கறிஞராக இருக்கின்றவர் வேண்டுமென்றே, தேவையற்ற தன் தகுதிக்கு குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: