தஞ்சை தமிழ் பல்கலையில் கோடிக்கணக்கில் முறைகேடு: துண்டு பிரசுரத்தால் பரபரப்பு

தஞ்சை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக துண்டு பிரசுரம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் பொறுப்பேற்று ஒரு ஆண்டு ஆகிறது. தகுதி இன்றி இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்த நியமனத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு பாலசுப்பிரமணியன் தடை வாங்கி, தொடர்ந்து துணைவேந்தர் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகம் மற்றும் பல துறை அலுவலகங்களில் நேற்றுமுன்தினம் துண்டு பிரசுரம் வீசப்பட்டிருந்தது.

தமிழ் பல்கலைக்கழக யோக்கியவான்கள் என்ற தலைப்பில் அந்த துண்டுபிரசுரத்தில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்கள் வருமாறு: முறைகேடுகள் தொடர்பாக மூடப்பட்ட தொலைதூர கல்வி மையங்கள் உள்பட பலவற்றில் இருந்தும் லட்சக்கணக்கில் ரூபாய் வசூல்......ரூசா நிதியில் ₹20 கோடி விரயம். முறைகேடு..பணம் பல இடங்களுக்கும் பாயும் மர்மம். மவுனம் காக்கும் துணைவேந்தர். என்ஏஏசி வருகையையொட்டி பல லட்சம் ரூபாய் பொறியியல் பிரிவு மூலமாக ஊழல். புதிதாக நிரப்பப்போகும் பணியிடங்களுக்கென கூறி அட்வான்ஸ் புக்கிங். துணைவேந்தரே பதில் என்ன? அரசே விசாரணை தேவை. இவ்வாறு தமிழ் ஆர்வலர்கள் என்ற பெயரில் துண்டு பிரசுரத்தில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

Related Stories: