நைஜர் நாட்டில் பயங்கரவாதிகளை குறிவைத்து நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 120 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

நைஜீரியா: நைஜர் நாட்டில் பயங்கரவாதிகளை குறிவைத்து நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 120 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆப்பிரிக்க நாடான நைஜரில், 2015-ம் ஆண்டு முதல் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில், மாலி-புர்கினோ பாசோ நாடுகளின் எல்லைக்கு அருகே பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படைகள் அதிரடி தாக்குதல்கள் நடத்தின.

இந்த தாக்குதல்களில் 120 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இதை நைஜர் நாட்டின் ராணுவம் உறுதி செய்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் வாகனங்கள், வெடிகுண்டு தயாரிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பில் உதவிய நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படைகளுக்கு நைஜர் ராணுவ மந்திரி இசவ்பவ் கடம்பே நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Related Stories: