×

பாட்டி சாவில் சந்தேகம் பேரன் போலீசில் புகார்

பெரம்பூர்: வியாசர்பாடி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவரது கணவர் இறந்து விட்டதால், மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்தார். நேற்று அனைவரும் வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது வள்ளியம்மாள் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வள்ளியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், வள்ளியம்மாவின் பேரன்  சுரேஷ் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், எங்களது வீட்டில் தனியாக இருந்த பாட்டி திடீரென இறந்துள்ளார். வீட்டில் இருந்த 7 சவரன்  நகை மற்றும் ரூ.5 லட்சம் மாயமாகி உள்ளது. எனவே, அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார். போலீசார் இதுகுறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : death ,grandson ,death suspect , Grandmother's death is suspicious, grandson, complaining to police
× RELATED புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை...