டாஸ்மாக் ஊழியர்கள் 27ம்தேதி ஆர்ப்பாட்டம்: 5 மண்டலங்களில் நடக்கிறது

சென்னை: பணி விதிகளை உருவாக்க வேண்டும், ஆய்வு நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி 5 மண்டலங்களில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, சங்கத்தின் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடை குறைந்தபட்சம் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பார் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27ம்தேதி வியாழக்கிழமை அன்று 5 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். 5 மண்டலங்களில் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: