×

பிப். 29ல் திமுக எம்பிக்கள் கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிப்ரவரி 29ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 29ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : MPs ,Pip ,DMK , Pip. , DMK MPs meeting
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...