சேலம், மதுரை கோட்டங்களில் ஓரங்கட்டப்பட்ட பஸ்கள் ஏலம்: தமிழக போக்குவரத்துத்துறை திட்டம்

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான சேலம், மதுரை கோட்டங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை ஏலம் விடுவதற்கு போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறுள்ள பஸ்களில் பல நீண்ட நாள் பயன்பாட்டில் இருந்த காரணத்தால், அவற்றை உபயோகிக்க முடியாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை ஓரம்கட்டிவிட்டு புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓரம்கட்டப்பட்ட பஸ்கள் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சேலத்தில் இயக்க முடியாத நிலையில் உள்ள 17 பஸ்கள் ஏலம் விடப்படுகிறது. இதேபோல் மதுரை அரசு போக்குவரத்துக்கழத்தில் 11 பஸ்களும் ஏலம் விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: